Home » News » Tamil-nadu » STUDENT ADMISSION HAS BEEN STOPPED IN 3 GOVERNMENT TEACHER TRAINING COLLEGES VIN GEE

சென்னை வெலிங்டன் உள்ளிட்ட 3 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்திவைப்பு..

உரிய விளக்கத்தை அளிக்க  தவறினால் இந்த ஆண்டிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை வெலிங்டன் உள்ளிட்ட 3 அரசு ஆசிரியர் பயிற்சி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்திவைப்பு..
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: September 17, 2020, 10:58 AM IST
  • Share this:
சென்னை வெலிங்டன் உள்ளிட்ட 3 அரசு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விதிகளை மீறி செயல்பட்ட 71 தனியார் பி.எட் கல்லூரிகளில் இந்த ஆண்டு அங்கீகாரம் ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேசிய கல்வியியல் பயிற்சி நிறுவனம் NCTE விதிகளை பின்பற்றாத காரணத்தால் சென்னை வெலிங்டன், குமாரபாளையம், புதுக்கோட்டையில் உள்ள 3 அரசு கல்லூரிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையினை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

விதிகளுக்குட்பட்டு பேராசியர்கள், கல்லூரி முதல்வர்கள் நியமிக்கப்படாதது, உட்கட்டமைப்பு வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Also read... பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் இந்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு..

மேலும் இந்த கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி தேசிய கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
விளக்கத்தை 90 நாட்களுக்குள் அளிக்க வேண்டும். உரிய விளக்கத்தை அளிக்க  தவறினால் இந்த ஆண்டிற்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading