Home /News /tamil-nadu /

டெண்டர் முறைகேடு: எஸ்பி வேலுமணி ஊழல் செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளது.. தமிழக அரசு

டெண்டர் முறைகேடு: எஸ்பி வேலுமணி ஊழல் செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளது.. தமிழக அரசு

எஸ்.பி.வேலுமணி

எஸ்.பி.வேலுமணி

கடந்த 2016 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை ₹58,23,97,052 அளவில் வருமானத்துக்கு மீறி வேலுமணி சொத்துகளை சேர்த்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளது என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி ஊழல் செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளதால் அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது.

    முந்தைய அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணை நடத்தி 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கு தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் சி.ஏ.ஜி தணிக்கை அறிக்கை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையிலேயே தொடர் விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

    மேலும் அரசுக்கு வேலுமணி பலநூறு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை கார்ப்பரேஷனில் சாலைகள் செப்பனிடும் பணிக்காக போடப்பட்ட ₹114 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தத்தில் முறைகேடு செய்யப்பட்டு அரசுக்கு ₹29 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது

    இதேபோல் 2014 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் கோவை மாநகராட்சியில் குப்பைகளை சுத்தம் செய்யவும் அதை வேறு இடங்களுக்கு மாற்றவும் போடப்பட்ட ஒப்பந்தத்தில், அரசு விலையை கருத்தில் கொள்ளாமல் கூடுதல் விலை நிர்ணயித்து எஸ் பி வேலுமணி வழங்கியதால் சுமார் ₹25 கோடிக்கும் மேல் அரசுக்கு இழப்பு. ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: தமிழகத்தில் விரைவில் ராம ராஜ்ஜியத்தை அதிமுக உருவாக்கும் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ


    மேலும்,  ‘லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில், கடந்த 2016 ஏப்ரல் முதல் 2021 மார்ச் வரை ₹58,23,97,052 அளவில் வருமானத்துக்கு மீறி வேலுமணி சொத்துகளை சேர்த்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளது. அதன் அடிப்படையில் தான் இந்திய தண்டனை சட்டம் 120 பி மற்றும் ஐபிசி 109 லஞ்ச தடுப்பு விதிகளின் கீழ் அவர்மீது கோவையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: சொத்துவரி உயர்வை தமிழக முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் - துரை வைகோ


    முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான விசாரணை முடிவடையும் தருவாயில் உள்ளது. அதன் இறுதி விசாரணை அறிக்கை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பக்கப் பட உள்ளது. எனவே வேலுமணி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தமிழக அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: ADMK, SP Velumani, Supreme court, Tamilnadu government

    அடுத்த செய்தி