வேலைநிறுத்தம் தொடரும்: மெட்ரோ ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!

சென்னை மெட்ரோ ஊழியர்கள் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினமும், 36 ரயில்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது 6 ரயில்கள் மட்டுமே ஓடுகின்றன.

வேலைநிறுத்தம் தொடரும்: மெட்ரோ ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: April 30, 2019, 6:01 PM IST
  • Share this:
எட்டு ஊழியர்களின் பணி நீக்கத்தை மெட்ரோ ரயில் நிர்வாகம் ரத்து செய்ய மறுத்துள்ளதால் ஊழியர்களின் பணி நிறுத்தம் தொடரும் என்று சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் பணி வரன்முறை செய்யவேண்டும், அவுட்சோர்சிங் முறையில் ஆட்களை நியமிக்கக்கூடாது, ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக பணியாளர் சங்கம் தொடங்கிய 8 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து மெட்ரோ ரயில் ஊழியர்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டன.


இன்றும் ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தொடர்வதால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களை கொண்டு ஒரு சில ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில், ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக, மெட்ரோ ரயில் பணியாளர் சங்கம், மெட்ரோ ரயில் நிர்வாகம், தொழிலாளர் நலத்துறை ஆணையம் இணைந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தர்ராஜன், ‘சென்னை மெட்ரோ ஊழியர்கள் நேற்றிலிருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தினமும், 36 ரயில்கள் ஓடிக்கொண்டிருந்த நிலையில் தற்போது 6 ரயில்கள் மட்டுமே ஓடுகின்றன.

Loading...

7 நிமிடத்துக்கு ஒருமுறை ஓடவேண்டிய ரயில் 35 நிமிடத்துக்கு ஒருமுறை மட்டுமே ரயில் ஓடுகின்றன. வேலை நிறுத்தப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றுதான் தொழிலாளர்கள் விரும்புகிறார்கள். சட்டவிரோதமாக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மெட்ரோ நிர்வாகம் எந்த விதிகளையும் சட்டத்தையும் பின்பற்றவில்லை.

பணிநீக்கம் செய்யப்பட்ட 8 பேருக்கும் வேலை வழங்கவேண்டும் என்று கோரிக்கைவைத்தோம். ஆனால், அதை ஏற்றுக்கொள்ள மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுத்துவிட்டது. அதனால், வேலைநிறுத்தம் தொடரும். நாளை மாலை 4 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...