Home /News /tamil-nadu /

Headlines Today : நூல் விலை உயர்வை கண்டித்து 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தம் - தலைப்புச் செய்திகள் (மே 17-2022)

Headlines Today : நூல் விலை உயர்வை கண்டித்து 2-வது நாளாக இன்றும் வேலைநிறுத்தம் - தலைப்புச் செய்திகள் (மே 17-2022)

நூல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம்

நூல் விலை உயர்வை கண்டித்து வேலை நிறுத்தம்

Headlines Today : நூல் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் ஜவுளி மற்றும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

  நூல் விலையை குறைக்க வலியுறுத்தி, தமிழகத்தில் இரண்டு நாள் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரண்டாவது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

  மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்காக 256 ஆம்புலன்ஸ்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பெய்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் ஒரு வாரம் முன்னதாகவே தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

  சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை திட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதிதாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

  நெல்லை மாவட்டத்தில் கல் குவாரி விபத்தில் சிக்கியவர்களில் மேலும் ஒருவர் சடலமாக நேற்றிரவு மீட்கப்பட்டார். மீதமுள்ள இரண்டு பேரை தேடும் பணி இன்று நடைபெற உள்ளது.

  திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே 12ஆம் வகுப்பு மாணவன் ஓட்டிச்சென்ற மினி லாரி கவிழ்ந்த விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.

  தமிழகத்தில் ஷவர்மா விற்பனைக்கு தடை இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதனை முறையாக சமைத்து விற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  அரசு பேருந்துகளில் கட்டணத்தை உயர்த்த முதலமைச்சர் இதுவரை அறிவுரை வழங்கவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.

  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே விபத்தில் உயிரிழந்த சிறுமிக்கு, அவரது தந்தை கோயில் கட்டி ஆண்டுதோறும் திருவிழா நடத்தும் விநோதமான நிகழ்வு அரங்கேறி வருகிறது.

  காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில், வேதபாராயணத்தை வடகலை, தென்கலையினர் பாடுவதே தொடர வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  சென்னை பல்லாவரத்தில் பப்ஜி விளையாட்டு மோகத்தில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

  மயிலாடுதுறை அருகே மது போதையில் அரசு பேருந்தை வழிமறித்த இளைஞர்கள் ஓட்டுநரிடம் வம்பிழுத்து அவரை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  சிவகங்கை மாவட்டம், கொந்தகையில் நடைபெற்று வரும் மூன்றாம் கட்ட அகழாய்வில் 30 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்படடுள்ளன.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் தனித்துவமான வேலை வாய்ப்புகள் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  அசாம் மாநிலத்தில் தொடரும் கனமழையால், ஒரு லட்சத்து 79 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் 11 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

  பிரதமரின் பயணத்தில் இந்தியா-நேபாளம் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

  இந்தியா- நேபாள நாடுகள் இடையேயான நட்பு, ஒட்டு மொத்த மனித குலத்திற்கே நன்மை பயக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

  ஆந்திராவில் 400 கிலோ கஞ்சாவை கடத்திச் சென்ற வாகனத்தை புஷ்பா பட பாணியில் நீர்த்தேக்கத்தில் தள்ளிவிட்டுச் தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

  ஜமைக்கா-வில் அம்பேத்கர் பெயரிலான சாலையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்.

  வடகொரியாவில் கொரோனா பரவும் நிலையில், பொதுமக்களுக்கு மருந்துகளை விநியோகிக்கும் பணியில் ஈடுபட ராணுவத்துக்கு அதிபர் கிம் ஜோங் உன் உத்தரவிட்டுள்ளார்.

  Must Read : அரக்கோணம் ரயில்வே யார்டில் பராமரிப்பு பணிகள்.. ரயில் சேவை மாற்றம் குறித்த தகவல் தெரிந்துக்கொள்ளுங்கள்

  இலங்கையின் பொருளாதாரம் அடுத்த சில மாதங்களுக்கு இதுவரை இல்லாத மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.

  கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 12-வது தேசிய ஜூனியர் ஆண்கள் ஹாக்கிப் போட்டி இன்று தொடங்குகிறது.

  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான மல்யுத்தப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க சாக்சி மாலிக் உள்ளிட்டோர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

  ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீழ்த்தியது. இதன்மூலம், பிளேஆஃப் வாய்ப்பை டெல்லி அணி பிரகாசமாக்கியுள்ளது.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி