• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • நெருங்கும் தீபாவளி... கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

நெருங்கும் தீபாவளி... கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்? முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

மாதிரி படம்

மாதிரி படம்

அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

  • Share this:
    தமிழகம் முழுவதும் அக்டோபர் 31ம் தேதியுடன் கொரோனா கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை  ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு, சுகாதாரத்துறை அதிகாரிகள் , பொதுத்துறை மற்றும் தமிழக அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அக்டோபர் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும், நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகளை திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 1200-க்கு கீழ் குறைந்துள்ளதால் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், வருகிற தீபாவளி பண்டிகையொட்டிபொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் நடைபெற உள்ள கூட்டத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

    தீபாவளி பண்டிகைக்கு புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் வணிக வாளகங்கள், வணிக நிறுவனங்கள் நிறைந்த இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கொரோனா மீண்டும் பரவல் தடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் ஆலோசிக்கப்பட உள்ளது.

    Also Read : அதிமுக ஆட்சியில் அரசு பணிகளில் ஈடுபட்ட கட்டுமான நிறுவனத்தில் ரெய்டு

    வணிக நிறுவனங்களில் மக்கள சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவது, ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்வது உள்ளிட்டவை உறுதி செய்வது உள்ளிட்ட அரசு வழிகாட்டுதல்கள் முறைப்படுத்தப்பட உள்ளது.  இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: