போக்குவரத்து விதிமீறல் புதிய அபராத தொகையானது கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த புதிய அபராத தொகையானது முன்பை விட பல மடங்கு உயர்த்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்து விதிமுறைகள் சற்று குறைந்துள்ளன.
குறிப்பாக சாலைகளில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் நபரும் ஹெல்மெட் அணிந்து செல்வது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் போலீசார் பலர் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்து வருவதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகளுடன் எழும் குற்றச்சாட்டு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் டிஜிபி சைலேந்திரபாபு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் செல்லக்கூடாது எனவும் ஹெல்மெட் அணியாமல் வரும் போலீசாரின் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவில் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் போலீசார் அதற்குண்டான அபராதம் கட்டி, ஹெல்மெட் வாங்கி வந்து காண்பித்த பின் தான், வாகனத்தை ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தான் போலீஸ் என்ற அடையாளத்தை காரணமாக கூறி அபராதம் விதிக்கும் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டாலோ அல்லது வாக்குவாதத்தில் ஈடுபட்டாலோ அந்த போலீசார் மீது வழக்கு பதிந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
Also see... டிசம்பர் 24, 25ல் கனமழைக்கு வாய்ப்பு..! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
மேலும், வாகன சோதனையில் ஈடுபடும் போக்குவரத்து மற்றும் சட்ட ஒழுங்கு போலீசருக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் சென்றால் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உத்தரவானது காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும் பொதுமக்கள் மத்தியிலும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Helmet, Police, Sylendra Babu, Two Wheeler