சென்னை: நாளை முதல் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை

மாதிரிப் படம்

நாளை முதல் சென்னை மாநகராட்சியில் அரசின் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் கூறியுள்ளார்.

  • Share this:
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள அம்மா மாளிகையில் மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆலோசனையில் சென்னையில் கொரோனா  பரவல் மற்றும் அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்தும் பரவலை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள "zonal enforcement team" அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி,சென்னை மாநகரில் 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில்  "zonal enforcement team" அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் முழு  ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கட்டுப்பாடுகளை மீறும் பொதுமக்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாளை முதல் அரசின் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மீறும் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் 30 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.நாளை முதல் இந்த குழுக்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றுகிறார்கள் என்பதை ஆய்வு செய்து மீறுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்.அதேபோல் ஓரிரு தினங்களில்  ’’Mass Vaccination camp’’ நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் முகக் கவசம் அணிவதை உறுதிசெய்யும் வண்ணம் பொதுமக்களுக்கு மாஸ்க் இலவசமாக வழங்கும் பணியும் துவங்க இருப்பதாக தெரிவித்தார்.
Published by:Tamilmalar Natarajan
First published: