Home /News /tamil-nadu /

நெல்லை பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

நெல்லை பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அமைச்சர் அன்பில் மகேஷ்

அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க பள்ளி கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    நெல்லை பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

    திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியில் நேற்று காலை 10.50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி டி. விஸ்வரஞ்சன், கே.அன்பழகன் மற்றும் ஆர். சுதீஷ் ஆகிய மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு மாணவர்கள் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    Also Read:  தனியார் தொழிற்சாலை பெண் ஊழியர்களின் நிலை என்ன? - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் விளக்கம்

    இந்த சம்பவம் தொடர்பாக பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, கட்டிடம் இடிந்து விழுந்த விபத்திற்கு சுற்றுச்சுவர் அடித்தளம் அமைக்காமல் கட்டப்பட்டுள்ளது தான் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “மிகவும் சங்கடத்துடன் இருக்கிறேன். மாணவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கழிவறையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அதனால்தான் நான் பள்ளிக்கு செல்லும்போது கழிவறையை முதலில் பார்ப்பேன்.

    Also Read:  அதிகாரிகளை மிரட்டும் வேலையை விடுங்க.. அதிமுகவினருக்கு செந்தில் பாலாஜி எச்சரிக்கை

    பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள், பொதுப்பணி துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்க பட உள்ளது. கழிவறை, மின்சார பிளக் போன்றவை பள்ளியில் எவ்வாறு உள்ளது என்பதை நேரில் பார்வையிட உத்திரவிட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இடம் இல்லாத பட்சத்தில் வாடகைக்கு இடம் தேர்வு செய்ய வலியுறுத்தியுள்ளோம். நெல்லை பள்ளி நிர்வாகம் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Anbil Mahesh Poyyamozhi, Children death, DMK, Govt School, Minister Anbil Mahesh, Nellai, School student, Tamil News

    அடுத்த செய்தி