ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எடப்பாடி பழனிசாமி முகாமை நோக்கி படையெடுக்கும் நிர்வாகிகள் - காலியாகிவரும் ஓபிஎஸ் கூடாரம்

எடப்பாடி பழனிசாமி முகாமை நோக்கி படையெடுக்கும் நிர்வாகிகள் - காலியாகிவரும் ஓபிஎஸ் கூடாரம்

எடப்பாடிபழனிசாமி

எடப்பாடிபழனிசாமி

admk :அதிமுகவில் பெரும்பான்மையான நிர்வாகிகள் பழனிசாமி வசம் உள்ளதால் கட்சியில் அவரது கை ஓங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை முடிவுக்கு வராமல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. காவல்துறையினர் பாதுகாப்புடன் நாளை திட்டமிட்டப்படி அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு உள்ள ஆதரவுகள் குறித்து பார்க்கலாம்.

அதிமுகவின் தலைமைக் கழக நிர்வாகிகள் 95% பேர் எடப்பாடி பக்கம் உள்ளனர்.அதிமுகவில் அமைப்பு ரீதியாக 75 மாவட்டங்கள் உள்ளன. இதில் , 69 மாவட்டச்செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைபாட்டில் உள்ளனர். எஞ்சியுள்ள ஆறு மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஓபிஎஸ் வசம் உள்ளனர்.அதேபோல, கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டத்திற்கு அடுத்துள்ள நகர, பேரூர் , ஒன்றியம் மற்றும் கிளைக் கழகம் வரை உள்ள 90 பேர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக உள்ளனர்.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களாக சுமார் 2600 பேர் உள்ளனர். இதில் 2300க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். குறிப்பாக , அதிமுகவில் உள்ள 65 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இரட்டை இலையில் வெற்றிப்பெற்ற புரட்சி பாரதம் ஜெகன்மூர்த்தி உட்பட 63 பேர் எடப்பாடி பக்கமும் , மனோஜ்பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் என இரண்டே எம்எல்ஏக்கள் மட்டுமே ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்.

Also Read: அப்போ 12.. இப்போ 6..! அணி மாறும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.. உச்சக்கட்ட பரபரப்பில் அதிமுக

மேலும், மக்களைவையில் உள்ள ஒரு உறுப்பினர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் நான்கு பேர் என 5 எம்பிக்கள் உள்ளனர். இதில் மூன்று பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், பெரும்பான்மையான நிர்வாகிகள் பழனிசாமி வசம் உள்ளதால் கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியுள்ளது.

Published by:Ramprasath H
First published:

Tags: ADMK, Edappadi Palanisami, Edappadi palanisamy, O Panneerselvam, OPS - EPS, Tamil News