தென்கிழக்கு அரபிக்கடலில் மே.16ல் புயல் உருவாக வாய்ப்பு: வானிலை மையம்

கோப்புப் படம்

தென்கிழக்கு அரபிக் கடலில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  தென்கிழக்கு அரபிக் கடலில் வரும் 16ம் தேதி புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில், தென்கிழக்கு அரபிக் கடலில் 14ம் தேதி, காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புயல் உருவானால் வடமேற்குப் பகுதியில் நகர்ந்து, கிழக்கு மத்திய அரபிக் கடலில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தென் தமிழகம், கேரளா மற்றும் லட்சத் தீவு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அரபிக் கடலுக்கு சென்ற மீனவர்கள் வரும் 14ம் தேதிக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் எனவும், வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

  மேலும், அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் டெல்டா மாவட்டங்களில் இடியுடன் லேசான மழை பொழியும் எனவும், பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  மேலும் படிக்க... புதுச்சேரியில் புதிய கட்டுப்பாடுகளுடன் அமலானது ஊரடங்கு.. பேருந்துகள் ஓடவில்லை.. நண்பகலுடன் கடைகளும் அடைப்பு..  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: