மின்வாரியத்தைத் தனியார் மயமாக்குவதை உடனே கைவிடுக - மு.க. ஸ்டாலின்

மின்வாரியத்தைத் தனியார் மயமாக்குவதை உடனே கைவிடுக - மு.க. ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

மின்வாரியத்தைத் தனியார் மயமாக்குவதை உடனே கைவிட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது, “எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசும், மின்துறை அமைச்சர் தங்கமணியும் ஊழல் செய்வதற்காக மின்வாரியத்தின் ஒவ்வொரு பகுதியாகத் தனியாருக்குத் தாரை வார்த்துவருகிறார்கள். புதிய துணை மின் நிலையங்களைத் தனியாருக்கு தாரை வார்த்துள்ள ஆட்சியாளர்கள், 650 மின் விநியோக உபகோட்டங்களில் உள்ள பணிகளுக்கு ஒரு கோட்டத்திற்கு 1 கோடியே 80 லட்சத்து 88 ஆயிரம் ரூபாய்க்கு ஒப்பந்தம் போடுகிறார்கள்.

    ஏற்கனவே உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ரூ.380 தினக்கூலியைத் தர மறுக்கும் அரசு தனியாரிடம் தினக்கூலித் தொகை ரூ.412 என ஒப்பந்தம் போடவேண்டிய அவசியம் என்ன? வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒப்பந்தத்தைவிடக் குறைவான கூலி தந்து தமிழக இளைஞர்கள் - ஒப்பந்தத் தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கும் சதியா? தனியார் மூலமாக அனுபவமில்லாத பணியாளர்களை மின்வாரியப் பணிகளுக்கு ஒப்பந்தம் செய்வது முறையா? தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிப்பது சரியா?

    Also read: ’வேளாண் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் செய்ய முடியாததை பாஜக செய்துள்ளது’ - குஷ்பு கருத்து

    தொ.மு.ச. உள்ளிட்ட மின்வாரிய சங்கத்தினர் அனைவரும் நடத்தும் போராட்டத்திற்கு திமுக முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவினையும் வழங்குகிறது. தமிழக மக்களின் பேராதரவுடன் தி.மு. கழக அரசு அமையும்போது ஒப்பந்தங்களில் உள்ள லாபக் கணக்குகளும் ஆராயப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் தவறாது எடுக்கப்படும்."

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Rizwan
    First published: