ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருவண்ணாமலையில் திருடு போன மரகதலிங்கம் 2 ஆண்டுகளுக்கு பின் மீட்பு!

திருவண்ணாமலையில் திருடு போன மரகதலிங்கம் 2 ஆண்டுகளுக்கு பின் மீட்பு!

மரகதலிங்கம்

மரகதலிங்கம்

2 ஆண்டுகளாக மரகதலிங்கத்தை போலீசார் தேடி வந்த நிலையில், ஜமீன் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

திருவண்ணாமலை வேட்டவலம் ஜமீன் பங்களாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருடு போன பல கோடி மதிப்புள்ள மரகதலிங்கம், பங்களா வளாகத்திலேயே மீட்கப்பட்டுள்ளது. கோவில் சுவரை துளைபோட்டு மரகதலிங்கத்தை கொள்ளையடித்து இப்படி குப்பையில் வீசி சென்றவர்கள் யார் என்பது குறித்து சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் ஜமீன் கோட்டை வளாகத்தில் மனோன்மணியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்புள்ள அரை அடி உயர பச்சை நிற மரகதலிங்கம் இருந்தது.

இந்த கோவிலில் சண்முக சிவாச்சாரியார் இரு வேளையும் பூஜைகள் நடத்தி வந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ந் தேதி காலை கோயிலின் நடையை திறந்து பார்த்த போது அவர் அதிர்ச்சியடைந்தார். கோவிலில் இருந்த பச்சை மரகதலிங்கம் திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் தங்க தாலி, வெள்ளியிலான ஒட்டியாணம், கிரீடம் உள்ளிட்டவையும் திருடப்பட்டன. கருவறையில் இருந்த மரகதலிங்கத்தை கோவில் சுவரை துளையிட்டு கொள்ளையடித்தனர்.

இந்த வழக்கை அப்போதைய திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்னி, கூடுதல் கண்காணிப்பாளர் ரங்கராஜன், வேலூர் சரக டிஜஜி தமிழ்சந்திரன் ஆகியோர் தலைமையில் தனிபடை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கொள்ளை குறித்த எந்த துப்பும் கிடைக்கவில்லை.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.கோவில் நிர்வாகிகள், வேட்டவலம் ஜமீனில் பணிபுரிந்து வரும் சிலரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் ஜமீன் ஊழியரான பச்சையப்பன் என்பவர் போலீசாருக்கு கொடுத்த தகவலில் காணாமல் போன மரகதலிங்கம் பங்களா வளாகத்திலுள்ள தண்ணீர் தொட்டியில் கிடப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் மரகதலிங்கத்தை மீட்டுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக மரகதலிங்கத்தை போலீசார் தேடி வந்த நிலையில், அதே ஜமீன் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணியில் ஜமீன் பணியாளர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகித்துள்ள போலீசார், கடந்த 4 நாட்களாக சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கோடிக்கணக்கில் மதிப்புடைய மரகதலிங்கத்தை, சுவரை துளைபோட்டு கொள்ளையடித்து இப்படி குப்பையில் வீசி சென்றதன் பின்னணி குறித்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Also see... அமெரிக்க காதலியின் கடத்தல் நாடகம் அம்பலம்

Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


Published by:Vaijayanthi S
First published:

Tags: Statue, Thiruvannamalai