• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் சிந்திய ரத்தத்திற்கு கிடைத்த வெற்றி - வைகோ

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 உயிர்கள் சிந்திய ரத்தத்திற்கு கிடைத்த வெற்றி - வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தீர்ப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார்

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு  இன்று பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், இந்த நாள் மகிழ்ச்சிக்குரிய திருநாளாகும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசு உத்தரவு செல்லும் எனவும், வேதாந்தா நிறுவனத்தின் மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறிய சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது.
இது மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, நீதிக்கு கிடைத்த வெற்றி, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 உயிர்கள் சிந்திய ரத்தத்திற்கு கிடைத்த நீதியாகவே நான் கருகிறேன்.

நீதிமன்றத்திற்கு தலைவணங்குகிறேன். தற்பொழுது செயல்படும் தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. முன்பு பல்வேறு குழப்பங்களை செய்திருந்தாலும் அவர்களின் தற்போதைய செயல்பாடு திருப்தி அளிக்கிறது.




படிக்க: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு - வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

படிக்க: திடீரென ஏற்பட்ட மரணம் - கதறி அழுத ‘செம்பருத்தி’ சீரியல் நடிகை









மக்கள் உயிர்களோடு விளையாடிய வேதாந்தா நிறுவனம் கோடி கோடியாக கொள்ளையடிக்க எதைவேண்டுமானாலும் சொல்வார்கள் எதையும் பொருட்படுத்த தேவையில்லை. வேதாந்தா நிறுவனம் இனி எங்கு சென்றாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. வேதாந்தா நிறுவனத்தின் வாதங்கள் எல்லாம் தவிடு பொடியாகியுள்ளது என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: