• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • BREAKING ”மக்களை சமாதானப்படுத்தவே ஆலையை மூட உத்தரவு” தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் குற்றச்சாட்டு

BREAKING ”மக்களை சமாதானப்படுத்தவே ஆலையை மூட உத்தரவு” தமிழக அரசு மீது ஸ்டெர்லைட் குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட்

  • News18
  • Last Updated :
  • Share this:
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிறகு, மக்களை சமாதானப்படுத்துவதற்காக ஆலையை நிரந்தரமாக மூட அரசு உத்தரவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி நகரின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ₹500 கோடி செலவு செய்துள்ளதாகவும்,

தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நெருக்கடிக்கு பணிந்து ஆலையை மூட உத்தரவிட்டுள்ளதாகவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தமிழக அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது.

ஆலையை மூடிய பிறகு காற்று மற்றும் தண்ணீர் மாசு குறைந்துள்ளதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்று தெரிவித்துள்ள ஸ்டெர்லைட் நிர்வாகம், ஆலையை மீண்டும் இயக்க 1.55 லட்சம் மக்கள் ஆதரவளித்துள்ளதாக ஸ்டெர்லைட் கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

First published: