• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஸ்டெர்லைட் ஆலையை மூடியதில் சீனாவின் சதி உள்ளது: வேதாந்தா பரபரப்பு குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட் ஆலையை மூடியதில் சீனாவின் சதி உள்ளது: வேதாந்தா பரபரப்பு குற்றச்சாட்டு

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு போடும்போது, 13 பேர் உயிரிழந்தனர் என்ற காரணத்தை தமிழக அரசு கூறி விட்டு, இப்போது நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணம் என்கின்றனர். 

  • News18
  • Last Updated :
  • Share this:
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேதாந்தா நிறுனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கு, நீதிபதிகள் சிவஞானம், பவானிசுப்பராயன் அமர்வு முன்உபு இன்று இறுதி விசாரணைக்கு வந்தது.

    வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்
    அரியமாசுந்தரம், ‘ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு ஏற்கனவே அரசிடம் அனுமதி வாங்கி உள்ளோம். இருப்பினும்
    மக்கள் போரட்டத்தினாலும், 13 பேர் மீதான துப்பாக்கி சூடு காரணமாகவே ஆலை மூடப்பட்டது. மே 22-ம் தேதி போரட்டத்தில் எப்படி 20 ஆயிரம் பேர் வந்தார்கள் என தெரியவில்லை.

    இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் அரசியல் நோக்கம் மற்றும் சில என்.ஜி.ஓக்களினால்
    இந்தப் போராட்டம் திட்டமிட்டு நடத்தப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு போடும்போது, 13 பேர் உயிரிழந்தனர் என்ற காரணத்தை தமிழக அரசு கூறி விட்டு,
    இப்போது நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணம் என்கின்றனர். துப்பாக்கி சூடு தொடர்பான சிபிஐ விசாரணையில் நாங்கள் கிடையாது.

    ஆனால் எங்கள் நிறுவனத்தை தண்டித்துள்ளனர். ஆலை மூடப்பட்டதாலும் ஆலையை பராமரிக்க அனுமதி மறுப்பதாலும், அரசும் சரியாக பராமரிக்காததாலும் அமிலங்கள் வெளியேறி கட்டிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சீன நிறுவனத்தின் சதி உள்ளது. போராட்டக்காரர்களுக்கு, சீனாவில் இருந்துதான் நிதி உதவி வந்துள்ளது’ என்று வாதிட்டார். இந்த வழக்கின் விசாரணை நாளையும் நடைபெறவுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: