• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது - ஸ்டெர்லைட் நிறுவனம்

தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பறிபோயுள்ளது - ஸ்டெர்லைட் நிறுவனம்

கோப்பு படம்

கோப்பு படம்

தாமிர உலோகத்துக்கு பகையுள்ளம் கொண்ட நமது அண்டை நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது.

  • Share this:
    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்றும் இதனால் மறைமுகமாக ஒரு லட்சம் மக்களின் வேலை வாய்ப்பு பறிபோய் விட்டது என்றும் ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மைச் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து  வேதாந்தா நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றனம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றத்த்தின் தீர்ப்புக்கு தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர். அரசியல் தலைவர்கள் பலர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக  ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மைச் செயல் அலுவலர் விடுத்துள்ள அறிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்யைில், “இந்தத் தீர்ப்பு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஆயிரக் கணக்கான சிறுசிறு வணிகங்கள், தொழில்முனைவோர், இந்த ஆலையின் இயக்கத்தைச் சார்ந்துள்ள சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் ஆகியோருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. நமது ஆலையின் இயக்கத்தின்போது பாதுகாப்பான, சூழல் சார்ந்த வலிமையான இயற்கை இருக்க வேண்டும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.

    எங்களது ஆலையின் இயக்கத்துக்கு எதிராக உண்மைக்கு மாறான தகவல்களைப் பரப்புவதற்காக சில தரப்பினரின் சில சம்பவங்களை வைத்தும், அரைகுறை உண்மைகளை வைத்தும் வேண்டுமென்றே இப்படித்தான் என்று நம்புகிற நிலையால் நாங்கள் ஊக்கம் இழந்துள்ளோம்.

    தாமிர உலோகத்துக்கு பகையுள்ளம் கொண்ட நமது அண்டை நாடுகளைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்பந்தம் நம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தாமிர உற்பத்தியில் சொந்தக் காலில் நிற்கும் நம் நாட்டின் திறமையைச் சில சக்திகள் சிதைப்பதற்கு இப்படி சதி செய்கிறார்கள்.

    நமது ஆலையின் இயக்கத்தினால் எந்தத் தருணத்திலும் மாசு குறித்த கவலை ஏற்பட்டதாக உரிய அதிகாரிகள் கூறியதில்லை. இந்நிலையில், வரும் காலங்களில் நீதியை நிலைநாட்டுவதற்காக இருக்கும் சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடர்ந்து செயல்படுவோம்” என்றுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: