STERLITE PLANT NOT ALLOWED TO OPEN SUPREME COURT VJR
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது - உச்சநீதிமன்றம் உத்தரவு
கோப்பு படம்
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு விளைவிக்கிறது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டே, ஆலையை மூடிய உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாகவும், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Last Updated :
Share this:
பராமரிப்பு பணிகளுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிய தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க வேண்டுமென, ஸ்டெர்லைட் சார்பில் இடைக்கால கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு எனவும், இதில் யாரும் தலையிட முடியாது எனவும் தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கடும் மாசு விளைவிக்கிறது என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதை கருத்தில் கொண்டே, ஆலையை மூடிய உத்தரவு செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாகவும், தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இடைக்கால நிவாரணம் கோர ஆலைக்கு எந்த முகாந்திரமும் கிடையாது என ஏற்கனவே பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளதை சுட்டிகாட்டி, தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என கூறியுள்ளது.
நாடு முழுவதும் பரவும் கொரோனா குறித்த தற்போதைய விரிவான தகவல்கள்