”மக்களை சமாதானப்படுத்தவே ஆலை மூடல்” ஸ்டெர்லைட் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல்

ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுத்ததாக அரசு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என வேதாந்தா நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

”மக்களை சமாதானப்படுத்தவே ஆலை மூடல்” ஸ்டெர்லைட் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல்
ஸ்டெர்லைட் ஆலை
  • News18
  • Last Updated: June 27, 2019, 9:31 AM IST
  • Share this:
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டோரை சமாதானப்படுத்தவே ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று பதிலளிக்க உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் மாசு கட்டுபாட்டு வாரியம் தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கமளித்து வேதாந்தா நிறுவனம் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது. அதில் கடந்த 10 ஆண்டுகளில் தூத்துக்குடி நகரின் சுற்றுச்சுழல் மேம்பாட்டுக்கு 500 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்றும் தங்களது ஆலையால் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தேசிய சுற்றுசுழல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை அளித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவு எடுத்ததாக அரசு கூறுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என குற்றம்சாட்டியுள்ள வேதாந்தா நிறுவனம், ஆலை மூடப்பட்ட பிறகு காற்று, தண்ணீர் மாசு குறைந்துள்ளதாக அரசு கூறுவதிலும் ஆதாரமில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.


மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு பாதிக்கப்பட்டோரை சமாதானப்படுத்தவே ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலையின் கருத்துக்களுக்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

மேலும் படிக்க... தண்ணீர் தட்டுப்பாடா? மக்களவையில் கொதித்த ரவீந்திரநாத்



அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading