ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இரண்டு மாதத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்! - நிர்வாகம் தரப்பில் உறுதி

இரண்டு மாதத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும்! - நிர்வாகம் தரப்பில் உறுதி

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்ஆலையை மூடும் அரசானை, இயற்கை நீதிக்கு எதிரானது. நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தரப்பில் விளக்கம் அளிப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் ஆலை இரண்டு மாத காலத்துக்குள் திறக்கப்படும் என்று அதன் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக அந்நிறுவன நிர்வாகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதுதொடர்பான வழக்கில் நீதிபதி தருண் அகர்வால் அறிக்கையின் அடிப்படையில் சில கட்டுப்பாடுகளுடன் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆலையின் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத், ‘ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்ட தமிழக அரசின் அரசாணை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்டது. அந்த அரசானை, இயற்கை நீதிக்கு எதிரானது. நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தரப்பில் விளக்கம் அளிப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், மூன்று வார காலத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கலாம் என்று உத்தரவிட்டுள்ளது. நாங்கள் ஆலையைத் திறப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். ஆலையைத் திறப்பதற்கு தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைக் கேட்டுள்ளோம். இரண்டு மாத காலத்துக்குள் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும். தூத்துக்குடியில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்டங்கள் செய்யவுள்ளோம். ஸ்டெர்லைட் ஆலையால்தான் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு உரிய ஆய்வுத் தரவுகள் இல்லை’ என்று தெரிவித்தார்.

Also see:

First published:

Tags: Sterlite issue