ஸ்டெர்லைட் விவகாரம் - தருண் அகர்வால் அறிக்கை கூறுவது என்ன?

தருண் அகர்வால் குழு ஆலைப்பகுதியில் ஆய்வு நடத்தி, அங்குள்ள மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து, அந்த அறிக்கையை டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்பித்தது.

Web Desk | news18
Updated: December 7, 2018, 10:45 AM IST
ஸ்டெர்லைட் விவகாரம் - தருண் அகர்வால் அறிக்கை கூறுவது என்ன?
முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால்
Web Desk | news18
Updated: December 7, 2018, 10:45 AM IST
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் குழுவினர் தேசிய பசுமைத் தீர்பாயத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் உள்ள விபரங்கள் வெளிவந்துள்ளன.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, அந்நிறுவனம் தொடர்ந்த வழக்கில், ஆலையை ஆய்வு செய்ய முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழுவை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அமைத்தது.

தருண் அகர்வால் குழு ஆலைப்பகுதியில் ஆய்வு நடத்தி, அங்குள்ள மக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து, அந்த அறிக்கையை டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்பித்தது.

அந்த அறிக்கையில், நிலத்தடி நீர் மாசுபாடு குறித்த ஆய்வறிக்கையை மாதம் ஒருமுறை ஆலை நிர்வாகம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் சமர்ப்பித்திருக்க வேண்டும் என்றும், ஆனால் அப்படி சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு (கோப்புப் படம்)


ஆனால் விதிகளின் படி மாதாந்திர அறிக்கை சமர்ப்பிக்காதது தெரிந்திருந்தும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலைக்கு நோட்டீஸ் எதுவும் வழங்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தாமிர கழிவுகளை அகற்றுவதில் ஸ்டெர்லைட் ஆலை வெளிப்படையான விதி மீறிலை செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள நிபுணர்குழு,உரிய அனுமதியின்றி 5,37, 765 டன் தாமிர கழிவை 11 இடங்களில் கொட்டியது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
Loading...
அபாயகரமான கழிவுகளை கையாள்வதற்கான அனுமதியை 58 மாதங்களாக ஸ்டெர்லைட் ஆலை புதுப்பிக்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அனுமதி புதுப்பிக்கவில்லை எனத் தெரிந்தும் ஆலை செயல்படுவதற்கான இசைவாணையை ஆண்டுதோறும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கியது தவறு என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் போராட்ட களத்தில் கமல்


ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வேதிப்பொருளின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படவில்லை என்றும், ஜிப்சம் கழிவுகளால் நீர் மாசடைந்துள்ளதா என்ற ஆய்வை ஸ்டெர்லைட் ஆலை மேற்கொள்ளவில்லை என்றும் நிபுணர்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனாலும், ஆலையை மூட உத்தரவிடுவதற்கு முன்பு ஆலை தரப்பு நியாயத்தை தெரிவிப்பதற்கு தமிழக அரசு வாய்ப்பு வழங்கியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நிபுணர் குழு, 25 விழுக்காடு இருக்க வேண்டிய ஆலையின் பசுமை வளைவு 12 விழுக்காடு மட்டுமே இருந்ததாகவும், ஆலையை ஆய்வு செய்த போது, பசுமை வளையத்தை கொஞ்சம் கூட பார்க்கமுடியவில்லை என்றும், ஆலை ஒரு கான்கிரீட் காடு போன்று இருந்ததாகவும், அறிக்கையில் கூறியுள்ளது.

மேலும், ஆலை மீது பழிபோடுவதற்கு அரசிடம் உறுதியான காரணங்கள் இல்லை என்றும் நிபுணர்குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.

Also See.. 

First published: December 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்