ஸ்டெர்லைட் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை?

ஸ்டெர்லைட்

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து மின் இணைப்பை வழங்க வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா கோரிக்கை வைத்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா குழுமம் தொடர்ந்த சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரை கிளை நிறுத்தி வைத்ததை அடுத்து வேதாந்தா குழுமம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது என்றதோடு, உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு வேதாந்தா குழுமத்திற்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தொடர்ந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அதனை ரத்து செய்து ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்து மின் இணைப்பை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Published by:Sankar
First published: