ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

'அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சிக்கூடங்கள்' - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

'அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சிக்கூடங்கள்' - அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

அமைச்சர் பெரியகருப்பன்

அமைச்சர் பெரியகருப்பன்

TN Assembly | எதிர்காலத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என அமைச்சர் பெரியகருப்பன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சிக்கூடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சி ஊராட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தில் பேசிய எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ், சோழிங்கநல்லூர் தொகுதி, புனித தோமையார் மலை ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு முன் வருமா என்று கேள்வி எழுப்பினார்.

ALSO READ | பிரிவினைவாத எண்ணம் கொண்டவர்களின் கருத்துக்கள் தமிழக அரசின் சார்பில் முன்வைக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்

இதற்கு பதிலளித்து பேசிய ஊரக வளர்ச்சி - ஊராட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், வரும் நிதியாண்டில் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், பெரும்பாக்கம், மேடவாக்கம், கோவிலம்பாக்கத்தில் ஏற்கனவே உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு, ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், சிட்லபாக்கம், ஒண்டியம்பாக்கத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் நன்மங்கலத்தில் தேவையான இடம் கண்டறியப்படவில்லை என்றும், எதிர்காலத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் உடற்பயிற்சி கூடம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

Published by:Sankaravadivoo G
First published:

Tags: TN Assembly