முகப்பு /செய்தி /தமிழ்நாடு / திரு.வி.க நகரில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்

திரு.வி.க நகரில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன்

சர்வதேச செஸ் போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளது. உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள இந்த போட்டிகளை உலகே திரும்பி பார்க்க உள்ளது என்றார்.

  • Last Updated :

திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமாலியா பகுதியில் கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்

தமிழக சட்டமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது திருவிக நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜமாலியா பள்ளியின் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், திருவிக நகர் ஜமாலியா பள்ளியின் அருகில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என தெரிவித்தார்.

மருதமலை முருகன் கோயிலில் ரோப் கார் வசதி கோரிய எம்எல்ஏ.. அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்!

மேலும் விளையாட்டு துறையில் பல்வேறு சாதனைகளை முதல்வர் நிகழ்த்தி வருகிறார். சர்வதேச செஸ் போட்டி தமிழகத்தில் நடைபெற உள்ளது. உலகில் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள இந்த போட்டிகளை உலகே திரும்பி பார்க்க உள்ளது.

top videos

    சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்கள் சென்னையில் 5 உள்ளது. ஜமாலியா பள்ளிக்கு அருகில் உள்ள, மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாநகராட்சி அதிகாரிகளை அனுப்பி ஆய்வு மேற்கொண்டோம். மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை தமிழ்நாடு விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு ஒப்படைக்கும் பட்சத்தில் அங்கு கால்பந்து விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    First published:

    Tags: TN Assembly