திமுக-வை எதிர்த்து அதிமுக, பாஜக, பாமக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகளின் நிலவரம் என்ன?

திமுக-வை எதிர்த்து அதிமுக, பாஜக, பாமக நேரடியாக போட்டியிட்ட தொகுதிகளின் நிலவரம் என்ன?

மு.க.ஸ்டாலின்

திமுக - அதிமுக, திமுக - பா.ஜ.க மற்றும் திமுக - பா.ம.க இடையே நேரடி போட்டி நிலவிய தொகுதிகளில் பெற்ற வெற்றி நிலவரத்தை தற்போது காணலாம்.

 • Share this:
  திமுக - அதிமுக இடையே 130 தொகுதிகளில் நேரடி போட்டி நிலவியது. அவற்றில் 78 தொகுதிகளில் திமுகவும், 52 தொகுதிகளில் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன.

  அ.தி.மு.க. - காங்கிரஸ் இடையே 15 தொகுதிகளில் நேரடி மோதல் நடைபெற்றது. அதில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. 6 தொகுதிகளிலும் அதிமுக கைப்பற்றியுள்ளது.

  தி.மு.கவை எதிர்த்து போட்டியிட்ட 14 இடங்களில் 3 இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது. திமுக 11 இடங்களிலும், பா.ஜ.க மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

  திமுக - பா.ம.க இடையே நேரிடையாக 18 தொகுதிகளில் நடைபெற்ற போட்டியில் 5 தொகுதிகளில் பா.ம.க. வெற்றி பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 13 தொகுதிகளில் திமுக வெற்றி வாகை சூடியுள்ளது.

  தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவையான நிலையில், 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து முதலமைச்சர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார்.

  இதையடுத்து, முதலமைச்சராக வரும் 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

  மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
  Published by:Vijay R
  First published: