தமிழகத்தில் 3-வது அணி களத்தில் இல்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
திமுக மற்ற கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் போது எங்களுக்கான தொகுதிகளை திமுகவிடம் வற்புறுத்துவோம். இப்போது பேசுவது அவசியமில்லை என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
- News18
- Last Updated: November 7, 2020, 3:44 PM IST
தமிழக தேர்தல் களத்தில் 3வது, 4வது அணிகளுக்கு எல்லாம் இடம் கிடையாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நியூஸ்18 செய்திக்கு அவர் அளித்த பேட்டியின் போது, பா.ஜ.க நடத்திய வேல் யத்திரை குறித்து உங்கள் கருத்து என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், வேல் யாத்திரை இறை நம்பிக்கைக்காக நடத்தப்படவில்லை. அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும், பதற்றத்தை ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து நடத்த உள்ளதாகவும் தெரிகிறது. இதைக் கண்காணித்து தமிழக அரசு தடுக்க வேண்டும்.
அரங்கத்தில் கூட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கும் நிலையில், ஆரம்பத்திலேயே இதற்கு தடை விதிக்காமல் காலதாமதம் செய்து கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் தடைவிதித்ததாக தமிழக அரசு தெரிவித்தது. மூன்றாவது அணி குறித்து கமல் தெரிவித்த கருத்துக்கு உங்கள் பதில்?
தேர்தல் களத்தில் பாஜக-அதிமுக ஒரு அணி. அதை எதிர்த்து திமுக தலைமையில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்று சேர்ந்து ஒரு அணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த இரு அணிகளுக்குள்தான் போட்டி. 3வது, 4வது அணிகளெல்லாம் களத்தில் கிடையாது என்று தெரிவித்தார்.
Also read... தமிழகம் முழுவதும் பிஎஸ்என்எல் ஒப்பந்த பணியாளர்களுக்கு தலா 40,000 ரூபாயை வழங்க நீதிமன்றம் உத்தரவு!திமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதா?
ஏற்கனவே திமுகவுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை தேர்தல் யுக்திகளை கட்சியின் மத்திய குழு முடிவு செய்யும். அதன் அடிப்படையில் 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுக உடனான கூட்டணியில் தொகுதி உடன்பாடு செய்துகொண்டு தேர்தலில் போட்டியிடலாம் என அதிகார பூர்வமான முடிவை திமுக தலைவரை சந்தித்து தெரிவித்தோம். பாஜக அதிமுகவை வீழ்த்துவது தான் பிரதான நோக்கம் என்பதையும் தெரிவித்தோம் என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதா?
திமுக மற்ற கட்சிகளோடு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தும் போது எங்களுக்கான தொகுதிகளை திமுகவிடம் வற்புறுத்துவோம். இப்போது பேசுவது அவசியமில்லை என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் நியூஸ்18 செய்திக்கு அவர் அளித்த பேட்டியின் போது, பா.ஜ.க நடத்திய வேல் யத்திரை குறித்து உங்கள் கருத்து என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், வேல் யாத்திரை இறை நம்பிக்கைக்காக நடத்தப்படவில்லை. அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவும், பதற்றத்தை ஏற்படுத்தவும் நடத்தப்படுகிறது. தொடர்ந்து நடத்த உள்ளதாகவும் தெரிகிறது. இதைக் கண்காணித்து தமிழக அரசு தடுக்க வேண்டும்.
அரங்கத்தில் கூட்டம் நடத்த கூட அனுமதி மறுக்கும் நிலையில், ஆரம்பத்திலேயே இதற்கு தடை விதிக்காமல் காலதாமதம் செய்து கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் தடைவிதித்ததாக தமிழக அரசு தெரிவித்தது.