• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • Tamilnadu Assembly election 2021: ஒரு மாத இடைவெளியில் வாக்கு எண்ணிக்கையால் அச்சம் எழுந்துள்ளது - கே.பாலகிருஷ்ணன்!

Tamilnadu Assembly election 2021: ஒரு மாத இடைவெளியில் வாக்கு எண்ணிக்கையால் அச்சம் எழுந்துள்ளது - கே.பாலகிருஷ்ணன்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

தனது வீட்டிற்கு அருகே உள்ள மாகா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தனது மனைவி ஜான்சிராணியுடன் வந்து கே.பாலகிருஷ்ணன் வாக்களித்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சிதம்பரத்தை சேர்ந்தவர். இவர் இன்று சிதம்பரத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். தனது வீட்டிற்கு அருகே உள்ள மாகா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு தனது மனைவி ஜான்சிராணியுடன் வந்து வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.பாலகிருஷ்ணன், தமிழ்நாடு முழுவதும் வந்து கொண்டிருக்கின்ற தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.

மேலும், பிரச்சாரத்திற்கு செல்லும்போதே மக்களிடம் அந்த எழுச்சியை காண முடிந்தது. இப்போதும் அது போன்றே உள்ளது. அதிமுக, பாஜக சரமாரியாக பண வினியோகம் செய்து இருக்கிறார்கள். அதையும் தாண்டி திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

Also read... TN Assembly Election 2021: அமைச்சர் செல்லூர் ராஜூ வாக்களித்த கருவியில் கோளாறு - 30 நிமிடங்கள் தாமதமாக வாக்களித்தார்!

தொடர்ந்து பேசிய கே.பாலகிருஷ்ணன் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடக்கிறது. ஆனால் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதிதான் நடக்கிறது. இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் கடைசி கட்ட தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்தி இருக்கலாம். இந்த இடைப்பட்ட காலத்தில் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பதில் என்ன நடக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட ஒரு நிலையை தேர்தல் ஆணையம் தவிர்த்து இருக்கலாம். இனி வரும் காலங்களில் இதுபோன்ற வாக்கு எண்ணிக்கையை தாமதம் இல்லாமல் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: