Home /News /tamil-nadu /

தமிழக பட்ஜெட்: மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக பட்ஜெட்: மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது: அண்ணாமலை குற்றச்சாட்டு

பாஜக அண்ணாமலை

பாஜக அண்ணாமலை

தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளதாக தமிழக பட்ஜெட் குறித்து அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் (Finace Minister Palanivel Thiagarajan ) 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த பட்ஜெட்டில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்களும் இந்த இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    இதையும் படிங்க:பட்ஜெட் பெயரில் 'அல்வா' - தமிழக பட்ஜெட்டை கிண்டலடித்த ஜெயக்குமார்

    இதுதொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில்,

    1. மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது

    2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ‘இன்றும்’ நிறைவேற்றவில்லை

    3. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது.



    6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.

    ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்’ செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Annamalai, BJP, TN Budget 2022

    அடுத்த செய்தி