• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது - மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடக்கூடாது - மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தமிழக தேர்தல் ஆணையம்

தமிழக தேர்தல் ஆணையம்

உள்ளாட்சி அமைப்புகளான பதவி இடங்கள் ஏலம் விடப்படுவதாக செய்திகள் வருகின்றன, இது கண்டிக்கத்தக்கது, தண்டனைக்குரியது.

  • Share this:
    தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் விடுடக்கூடாது என்றும் மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இது தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டதை தொடர்ந்து கடந்த 15ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் உள்ளாட்சி அமைப்புகளான பதவி இடங்கள் ஏலம் விடப்படுவதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள், மக்களாட்சி தத்துவத்துக்கும், அரசியல் சட்டத்துக்கும் புறம்பாக நடைபெறும் இத்தகைய செயல்கள் மிகவும் கண்டிக்கத் தக்கது. தண்டனைக்கு உரியது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய பதவி இடங்கள் இவ்வாறு ஏலம் விடுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கும் செயல் என்பதால் இவற்றை தடுத்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் தக்க முன்ஏற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

    Must Read : மாணவர் சேர்க்கை குறைவு: தமிழகத்தில் 20 பொறியியல் கல்லூரிகள் மூடல்

    மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி கிராமப்புற மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பதவியிடங்கள் அனைத்தும் தேர்தல் மூலம் நிரப்பிட மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: