• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஊரக உள்ளாட்சித் தேர்தல் : வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுரை

ஊரக உள்ளாட்சித் தேர்தல் : வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய அறிவுரை

மாநில தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம்

பூத் சிலிப் இல்லையென வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.

  • Share this:
    ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு அன்று பூத் சிலிப் இல்லையென வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது எனவும், வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு 14 மாற்று ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சைகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வாக்கு சேகரித்தார்.பஞ்சமாதேவி கிராமத்தில் 100 நாள் வேலைதிட்டத்தில் பணியாற்றிய பெண்களிடமும், பேருந்தில் ஏறி பயணிகளிடமும் வாக்கு சேகரித்தார். அப்போது மூதாட்டி ஒருவர் உற்சாகமாக நடனமாடி அமைச்சரை வரவேற்றார்.

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொண்டசமுத்திரம் ஊராட்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் ரவி பிரசாரம் செய்தார். காவனூர் பகுதியில் பிரசாரத்திற்கு செல்ல முயன்றபோது. அடிப்படை வசதிகள் செய்யவில்லை என கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்த கட்டணாச்சம்பட்டியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் காந்தியவாதி ரமேஷ் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் லஞ்சம், ஊழலை ஒழித்துவிடுவேன் என கூறினார். எனவே மறந்தும் கூட தனக்கு வாக்களித்துவிட வேண்டாம் என்றும் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.

    திருவாரூர் மாவட்டம் பள்ளிவாரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் அதிமுகவின் சாவித்திரி, வாக்காளர்களின் காலில் விழுந்து ஆதரவு திரட்டினார். இதேபோல், கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தாழை உமா மகேஸ்வரியும் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.

    தேர்தலுக்கு வாக்கு சீட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் 8 லட்சம் வாக்குசீட்டுகள் இருப்பு உள்ள நிலையில், ஊராட்சி தலைவர் பதவிக்கு கூடுதலாக ஒரு லட்சத்து 61 ஆயிரம் வாக்கு சீட்டுகள் சென்னையிலிருந்து சீல் இடப்பட்டு கொண்டுவரப்பட்டன. அவற்றை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு நேரில் ஆய்வு செய்தார்.

    Must Read : 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் நவம்பர் 1 முதல் இயங்கும் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

    இந்நிலையில், வாக்குப்பதிவு அன்று பூத் சிலிப் இல்லையென வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது எனவும், வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் எனவும் மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. பட்டியலில் இடம்பெற்று வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு 14 மாற்று ஆவணங்களில் ஒன்றை வைத்து வாக்களிக்க அனுமதிக்கவும் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: