முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இரவு 10 மணிவரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இரவு 10 மணிவரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம் - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாநில தேர்தல் ஆணையம்

மாநில தேர்தல் ஆணையம்

Campaign Timing : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, பரப்புரை மேற்கொள்ளலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

  • Last Updated :

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இதில், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பரப்புரை மேற்கொள்வதற்கு கூடுதல் நேரம் அளிக்கப்படுவதாகவும், காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பரப்புரை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையின் போது நடைபெறும் சாலை நிகழ்ச்சிகள், பாத யாத்திரை, சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்களுக்கான கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சிகளுக்கு உரிய அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தியுள்ள தேர்தல் ஆணையம்,

கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவரது ஒப்புதலை பெறுவது அவசியம் எனவும் அறிவித்துள்ளது.

Must Read : உதயநிதிக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.. ஏன் தெரியுமா? - எடப்பாடி பழனிசாமி

top videos

    மேலும், பரப்புரையின் போது கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    First published:

    Tags: Election Campaign, Local Body Election 2022