முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நிறுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 30-ல் தேர்தல்!

நிறுத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி 30-ல் தேர்தல்!

  • Last Updated :

நிறுத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு வரும் 30-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த டிசம்பர் 27, 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடத்தப்பட்டது.

இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11-ம் தேதி நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர், 26 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் 41 ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் மற்றும் 266 கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவியிடங்களுக்கு பல்வேறு காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், நிறுத்தி வைக்கப்பட்ட தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் 30 - ஆம்தேதி நடத்தப்படும் என்று மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Also see...

top videos

    First published:

    Tags: Local Body Election 2019