• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாநில வளர்ச்சி கொள்கை குழு ஆலோசனை

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாநில வளர்ச்சி கொள்கை குழு ஆலோசனை

மு.க.ஸ்டாலின் - ஜெயரஞ்சன்

மு.க.ஸ்டாலின் - ஜெயரஞ்சன்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மாநில வளர்ச்சி கொள்கை குழு துணை தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட 9 பேர் கொண்ட குழு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

  • Share this:
மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் துணை தலைவராக நியமிக்கப்பட்ட ஜெயரஞ்சன் உட்பட 9 பேர் கொண்ட குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மாநில வளர்ச்சி கொள்கைக் குழு துணைத் தலைவராக ஜெயரஞ்சனை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்னர் உத்தரவிட்டார். அந்த உத்தரவில், “தமிழகத்தில், மாநில திட்டக் குழு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால், 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25 ஆம் நாள் ஏற்படுத்தப்பட்டது. மாநில திட்டக் குழு, முதலமைச்சரின் தலைமையின்கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு, மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது. மாநில திட்டக் குழு துணைத் தலைவரின் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளின் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாநில திட்டக் குழுவானது, கடந்த 23.04.2020-ல் 'மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவாக' மறுசீரமைப்பு செய்யப்பட்டு, அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல், கொள்கை ஒத்திசைவு உருவாக்குதல், சிறப்பு திட்டங்களைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவைப் பின்வருமாறு திருத்தியமைத்து உத்தரவு பிறப்பித்தார், அதன்படி, பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும்; பேராசிரியர். ராம. சீனுவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர்கள் ம. விஜயபாஸ்கர், சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி மு.தீனபந்து, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா, மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்” என சில தினங்களுக்கு முன்னர் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டது.

Must Read : கட்டுப்பாடுகளை தளர்த்துவது பேரழிவை ஏற்படுத்தும் - உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

இந்நிலையில், மாநில வளர்ச்சி கொள்கை குழுவில் நியமிக்கப்பட்ட துணை தலைவர் ஜெயரஞ்சன் உட்பட 9 பேர் கொண்ட குழு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலிலுடன் இன்று காலை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். முதலமைச்சருடனான ஆலோசனைக்கு பின்னர், துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் குழு ஆய்வு கூட்டம் நடைபெற உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Suresh V
First published: