மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது ராகுல் காந்தியின் பேச்சு: கே.எஸ். அழகிரி!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமைதி நிலவும் என்று கூறியிருந்தால், காங்கிரஸ் பாகிஸ்தான் உடைய ஏஜென்ட் என்று பாஜக கூறி இருப்பார்கள் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

மக்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது ராகுல் காந்தியின் பேச்சு: கே.எஸ். அழகிரி!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி
  • News18
  • Last Updated: April 13, 2019, 12:07 PM IST
  • Share this:
தமிழகத்தில் ராகுல்காந்தி மேற்கொண்ட பிரச்சாரம் மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, பாஜகவிடம் அழுத்தம் கொடுத்து நீட் தேர்வுக்கு விலக்கு பெற அதிமுகவிற்கு தைரியம் கிடையாது.

காங். தேர்தல் அறிக்கையில் விரும்பும் மாநிலத்திற்கு மட்டுமே நீட் தேர்வு விரும்பாத மாநிலத்திற்கு ரத்து என கூறியுள்ளோம். அப்படி பாஜகவினரால் தெளிவாக சொல்லிவிட முடியாது என்றும் தெரிவித்தார்.


பாஜக ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி குறைந்துவிட்டது என்று கூறிய கே.எஸ்.அழகிரி பாஜக கொண்டு வந்த திட்டத்தால் மக்கள் பிரச்சனை தீர்ந்தது என ஒரு திட்டத்தைக் கூட அவர்களால் சொல்லமுடியாது என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அமைதி நிலவும் என்று கூறியிருந்தால், காங்கிரஸ் பாகிஸ்தான் உடைய ஏஜென்ட் என்று பாஜக கூறி இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், வேலூரில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அண்ணா திமுக கருதுகிறது. ஆகவே பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். தேனியில் பணம் நடமாடுவதை விடவா வேலூரில் பணம் நடமாடுகிறதா? என்றும் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பினார்.Also see...


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்