Home /News /tamil-nadu /

சாதி ரீதியிலான வினா.. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டீஸ்

சாதி ரீதியிலான வினா.. பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டீஸ்

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் வரலாற்று துறைத்தலைவர் ஆகியோருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சர்ச்சைக்குரிய கேள்வி தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை எம்.ஏ. வரலாறு பாடத்திற்கான செமஸ்டர் தேர்வில், தமிழ்நாட்டில் உள்ள நான்கு சாதிகளின் பெயர்களை குறிப்பிட்டு, அதில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இது சாதிய பாகுபாடு கருத்தை ஊக்குவிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.  இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கம் ஜெகன்நாதன் அளித்துள்ளார். அந்த வினாத்தாளை தயாரித்தது யார்? என்பது குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு, தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்கு ஜெகன்நாதன் உத்தரவிட்டுள்ளார்.

    'பெரியாரின்' பெயரை தாங்கி நிற்கும் பல்கலைக்கழகத்திலேயே மாணவர்களிடத்தில்,பெரியாரின் கொள்கைகளை கொச்சைப்படுத்தியும்,
    சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவித்தும் செமஸ்டர்தேர்வு வினாத்தாளில் கேள்விகள் கேட்டிருப்பதுதான் திராவிட மாடலா? இதுதான் திமுகவின் சமூகநீதியா? என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வினாத்தாள் தயாரித்தவர்கள் மற்றும் தேர்வு நடத்தியவர்களின் சாதிய வன்மத்தை காட்டுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டிவிட்டர் பதிவில், தேர்வுகளில் மாணவர்களின் கற்றல் மற்றும் புரிந்து கொள்ளும் திறன்களை அறிய பல வழிமுறைகள் இருக்கும் நிலையில், இப்படி ஒரு வினா எழுப்பப்பட்டது தவறு என கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: எது தாழ்ந்த சாதி? - சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வில் இடம் பெற்றுள்ள கேள்வியால் சர்ச்சை

    இந்த சர்ச்சை குறித்து உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இப்பிரச்னை தொடர்பாக, குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

    பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் கோபி அளித்துள்ள விளக்கத்தில், சர்ச்சைக்குரிய வினா குறித்து பல்கலைக்கழகத்திற்கு எந்த விதமான உள்நோக்கமோ, நேரடியான தொடர்போ இல்லை என்று தெரிவித்துள்ளார். வினாத்தாள் குறித்து முறையான விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

    மேலும் படிக்க: ஆரியர்களை புனிதப்படுத்தி விடலாம் என ஆளுநர் நினைக்கிறாரா? - முரசொலி கண்டனம்

    இதனிடையே, எது தாழ்ந்த சாதி என்கிற சர்ச்சை கேள்வி தொடர்பாக, தமிழ்நாடு ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. பல்கலைக்கழகம் போன்ற அமைப்புகளே சமூக வரம்பு மீறலில் ஈடுபடுவதை சகித்துக் கொள்ள முடியாது எனவும், இதுபோன்ற செயல்களை வளர்க்க நினைக்கும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேட்டு பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர், பல்கலைக்கழக பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் மற்றும் வரலாற்று துறைத்தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது
    Published by:Murugesh M
    First published:

    Tags: Caste, Periyar University, Salem

    அடுத்த செய்தி