• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னையில் வடியாத மழைநீர்... மக்கள் சென்றுவர இலவச படகு சவாரி தொடக்கம்

சென்னையில் வடியாத மழைநீர்... மக்கள் சென்றுவர இலவச படகு சவாரி தொடக்கம்

சென்னை வடியாத மழைநீர்... மக்கள் சென்றுவர இலவச படகு சவாரி தொடக்கம்

சென்னை வடியாத மழைநீர்... மக்கள் சென்றுவர இலவச படகு சவாரி தொடக்கம்

சென்னை தாழம்பூர் அருகே இன்னும் மழைநீர் வடியாததால் பொதுமக்கள் வெளியில் சென்றுவர ஊராட்சி சார்பில் இலவச படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.

  • Share this:
    சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் இன்னும் தேங்கி உள்ளது. அதில் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள தாழம்பூர் ஊராட்சிக்குட்பட்ட டிஎல்எப் சாலை பகுதியும் ஒன்று. இங்கு இடுப்பளவு தேங்கியிருந்த நீர் ராட்சத மோட்டர் மூலம் வெளியேற்றப்பட்டபோதும் சாலையில் இன்னும் முழங்கால் அளவிற்கு நீர் உள்ளது. இருபுறமும் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி உள்ளது. அதில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் தென்படுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    இப்பகுதி அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் 4,000 பேர் அத்தியாவசியப் பெருட்கள் வாங்கக் கூட வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர். இதனையடுத்து தாழம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமியின் முயற்சியை அடுத்து டிஎல்எப் சாலை குடியிருப்பு பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் படகு போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

    தற்போது அப்பகுதியில் மீனவர்களை கொண்டு 4 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் சற்று நிம்மதி அடைந்த பொதுமக்கள், பால், மருந்து, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க படகுகள் மூலம் கடைகளுக்கு சென்று வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் ஆயிரம் பேர் படகுகளில் இலவசமாக சவாரி செய்வதாக கூறுகிறார் மீனவர் வேலுக்குமார்.



    டிஎல்எப் சாலையில் மழைநீர் வடிய தாமதமானாலும் மாற்று ஏற்படாக இப்பகுதியில் ஊராட்சி சார்பில் படகு போக்குவரத்து தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறுகிறார் அப்பகுதியில் வசிக்கும் நரசிம்மன். டிஎல்எப் பகுதியில் தற்காலிக ஏற்படாக படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது போல், இப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க அரசு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: