Home /News /tamil-nadu /

பழங்குடி மக்களுக்காக போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்!

பழங்குடி மக்களுக்காக போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்!

 பழங்குடி மக்களுக்காக போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்!

பழங்குடி மக்களுக்காக போராடி வந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்!

ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களை தனது இரண்டாவது பிறப்பிடமாக கருதி வாழ்ந்து வந்தார்.

  ஜார்க்கண்ட் மாநில பழங்குடி மக்களுக்காக 36 வருடங்கள் போராடிய மனித உரிமை செயற்பாட்டாளர் ஸ்டேன் சுவாமி காலமானார்.  கடைசியாக அவரது உடலை பார்க்க கூட முடியவில்லை என குடும்பத்தினரும் கிராமத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து புள்ளம்பாடி அருகே உள்ள விரகாலூர் கிராமத்தில் வசித்தவர் லூர்துசாமி, கிப்பேரிம்மாள் இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகளும் 3 ஆண் பிள்ளைகளும் பிறந்தனர். இதில் ஐந்தாவதாக பிறந்தவர் ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி இவர் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி பிறந்தார் 20வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினார். 20 வயது வரை இவரது மூத்த சகோதரர் இருதயசாமி வளர்த்து வந்தார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  1957ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதி ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி துறவி யாராக ஆனார். பின்னர் 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி பாதிரியாராக பதவியேற்றார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஏ வரலாறு பட்டம் பெற்றார். பாதிரியார் படிப்பதற்காக 14 வருடம் திண்டுக்கல், மணிலா, பிலிப்பைன்ஸில் சென்றுள்ளார். இதன் பின்னர் 15 வருடம் பெங்களூர் சமூக கல்வி நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். அதன்பின்பு 36 வருடம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று பழங்குடி மக்களுக்காகப் போராடி உள்ளார்.

  ஸ்தனிஸ்லாஸ் லூர்துசாமி தனது பெயரை ஸ்டேன் சுவாமி என சுருக்கிக் கொண்டு பழங்குடி மக்களுக்காகப் அவர்களின் உரிமையை பெற்றுத் தருவதற்காக போராடி உள்ளார்.
  80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார் மேலும் சுயசரிதை எழுதி முடிக்கும் முன்பு அக்டோபர் 8ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இரவில் தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்தனர்.

  ஜார்கண்ட், பீகார் போன்ற மாநிலங்களை தனது இரண்டாவது பிறப்பிடமாக கருதி வாழ்ந்து வந்தார். அங்கு நிலவிய சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், பழங்குடியினர், தலித் மக்கள் சுரண்டப்படுவதையும், இயற்கை வளங்கள் அரசாங்கங்கள் மூலம் சண்டை போடுவதையும் ஆய்வு செய்து பல்வேறு கட்டுரைகள் எழுதி உள்ளார்.

  Also read: ஒலிம்பிக் போட்டியில் திருச்சியில் இருந்து இருவர் பங்கேற்பு!

  மகாராஷ்டிர மாநிலம் பீமா கோரேகான் வழக்கில் இவரது பெயர் பொய்யாக சேர்க்கப்பட்டது. அதற்கு முக்கிய காரணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அன்றைய அரசின் ஆதரவோடு நிலத்தை ஆக்கிரமித்து இயற்கையை சுரண்டி அவர்களின் கனவுகள் தவிடுபொடியானது தான் காரணம் என்று கருதி தேசிய புலனாய்வு அமைப்பு சூழ்ச்சி செய்து இந்த வழக்கில் சிக்க வைத்துள்ளது.

  மகாராஷ்டிரா காவல்துறை சந்தேகப்படும் நபராக கருதி ஜார்கண்ட் காஞ்சியில் இவர் வாழ்ந்த இடத்தை 28 ஆகஸ்ட் 2018 மற்றும் 12 ஜூன் 2019 ஆகிய தேதிகளில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
  அதன்பிறகு இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. ஒரு வருடம் காலத்திலும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் 5 முறை சுமார் 15 மணி நேரம் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை செய்யப்பட்டார்.

  கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் அழைப்பு விடுத்திருந்தனர். அவருக்கு அப்போது வயது 83. பார்க்கின்சன் நரம்புத்தளர்ச்சி நோயால் அவதிப்படுவதாலும், ஜார்க்கண்ட் அரசு 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியில் பயணம் செய்ய கூடாது என்று உத்தரவு போட்டதால் தன்னால் மும்பைக்கு வர இயலாது என்று தெரிவித்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தினால் அதற்கு தயார் என்று கூறியுள்ளார்.

  ஆனால் இவற்றையெல்லாம் தேசிய புலனாய்வு அமைப்பு உதாசீனப்படுத்தி கடந்த அக்டோபர் எட்டாம் தேதி இரவு ஏழு முப்பது மணி அளவில் அதிரடியாக ஸ்டான் சுவாமி தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

  Also read: வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்க தானுங்க சார்.. போதையில் போலீசாரிடம் ரகளை செய்த கோவை குடிமகன்கள்!!

  விடுதலை செய்ய வேண்டும் என பலமுறை வழக்கறிஞர் சந்தானம் மனுக்கள் போட்டார். மேலும் 10 மாதமாக சிறையில் போதிய மருத்துவ வசதி எதுவும் செய்து தராமல் இருந்தால் அதன் பின்னர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இல்லாமல் உயிரிழந்தார்.

  இதுகுறித்து அவரது சகோதரர் மற்றும் பேரன் கூறும் பொழுது,
  இருபது வயதில் விட்டு வீட்டை விட்டு சென்றவர் இரண்டு அல்லது மூன்று வருடத்தில் வேறு காரணங்களுக்காக திருச்சி வரும்போது ஒருமுறை வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தங்கி விட்டு செல்வார்.

  தங்களது குடும்பத்தில் உள்ள சுக துக்க நிகழ்ச்சியில் பங்கு கொள்ள மாட்டார். அவர் எப்போது திருச்சி வருகிறாரோ அப்போது மட்டும் இங்கு வந்து செல்வார். அவரது உடலை பார்க்க கூட எங்களால் முடியவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. மேலும் பழங்குடி மக்களும் இவரது இழப்பால் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். அங்கு மட்டும் அல்லாமல் இங்கு உள்ள கிராம மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

  செய்தியாளர் - இ.கதிரவன்
  Published by:Esakki Raja
  First published:

  Tags: Human rights activist, Social activist, Trichy

  அடுத்த செய்தி