முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “என் பிறந்தநாளில் இதை பண்ணுங்க” - திமுக தொண்டர்களுக்கு மடல் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

“என் பிறந்தநாளில் இதை பண்ணுங்க” - திமுக தொண்டர்களுக்கு மடல் எழுதிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

மார்ச் 1ஆம் தேதி தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாட உள்ள நிலையில் திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 1ஆம் தேதி தனது 70வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து, நலத்திட்டங்கள் வழங்குவது உள்பட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.  இந்தன் நிலையில் தனது பிறந்தநாளை பேனர்கள் இன்றி, ஆடம்பர விழாக்களின்றி எளிமையான முறையில் கொண்டாட வேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில், ஏழை - எளியவர்களுக்கு நல உதவிகள் செய்தும், கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியும் பயன்தரும் வகையில் விழாவை கொண்டாட வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்குவோம்; இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காப்போம் என்பதே தனது பிறந்தநாள் செய்தி என கூறியுள்ள மு.க.ஸ்டாலின், சமூகநீதி - சமத்துவம் - சுயமரியாதை - மாநில உரிமையை தேசிய அளவில் நிலைநாட்டும் ஜனநாயக அறப்பணிக்கு தொண்டர்கள் அளிக்கும் ஒத்துழைப்பையே சிறந்த வாழ்த்துகளாக கருதுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: CM MK Stalin, DMK, MK Stalin