ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கடவுள் இல்லை என்று சொன்ன ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுரமுத்திரையை பயன்படுத்துகிறார்: அண்ணாமலை

கடவுள் இல்லை என்று சொன்ன ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுரமுத்திரையை பயன்படுத்துகிறார்: அண்ணாமலை

கடவுள் இல்லை என்று சொன்ன ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுரமுத்திரையை பயன்படுத்துகிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடவுள் இல்லை என்று சொன்ன ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுரமுத்திரையை பயன்படுத்துகிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடவுள் இல்லை என்று சொன்ன ஸ்டாலின் ஆண்டாள் கோவில் கோபுரமுத்திரையை பயன்படுத்துகிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • 1 minute read
  • Last Updated :

சிவகாசியில் தனியார் மஹாலில் விருதுநகர் மேற்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, பாஜக அடுத்த கட்டத்துக்கு நகர தயாரக உள்ளது. தற்போது 4 சட்டமன்ற உறுப்பினரை கொண்டுள்ள கட்சி அடுத்த 5 வருடத்தில் 150 உறுப்பினர்களை கொண்டிருக்கும்.

கடவுள் இல்லை என்று சொன்ன ஸ்டாலின், ஆண்டாள் கோவில் கோபுரமுத்திரையை பயன்படுத்துகிறார். கடவுள் இருக்கிறார் என்பதை ஸ்டாலின் ஒத்துகொள்ள வேண்டும். கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் சட்டமன்றத்தில் கடவுளைப் பற்றியே விவாதித்து வருகின்றனர்.

மொட்டை போட இலவசம் என அறிவிக்கின்றனர். இதனை திமுகவினர் மொட்டை போட வந்து விட்டதால் என்பதாக புரிந்து கொள்ள வேண்டும். இதுவே திமுகவின் கடைசி கால ஆட்சி, இனிமேல் திராவிடத்திற்கு தமிழகத்தில் வேலை இல்லை.

தமிழக்தில் 2 மாத காலமாக பாஜகவை பற்றி கி.வீரமணி உட்பட பலர் அதிகமாக பேசி வருகின்றனர். சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. விரைவில் விலை குறைக்கப்படும். அதுவரை மக்கள் பொருத்து கொள்ள வேண்டும். விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு நாள் கூட பட்டாசு பிரச்சினை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதித்து இல்லை என்று குற்றம்சாட்டினார்.

Also read: அடைகாத்த கோழி போல பொத்திப் பொத்தி வளர்க்கப்படும் உதயநிதி ஸ்டாலினால், தலைவராக முடியாது: அண்ணாமலை

மேலும், பாஜகவில் மட்டுமே பொறுப்புகள் உங்களை தேடி வரும். காங்கிரஸ் கட்சி மட்டுமே தலைவரே இல்லாத கட்சி. இதனால் மட்டுமே அழிந்து வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பின் தமிழகத்திற்கு பிடித்த பீடை ஒழிய போகிறது.

திமுகவை ஒழித்துவிட்டு பாஜகவை ஆட்சி அமைக்க வைப்பதே என் வேலை. வழக்கு போட்டு மிரட்டினாலும், எதற்கும் பயப்பட கூடிய ஆள் நான் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published: