இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யக் கூடாது: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

விவாதம் மற்றும் ஆலோசனைகள் நடத்தியபிறகு மீன்வர்களின் கருத்துகளைப் பெற்று மீனவர் நலன் காக்கும் வகையிலும் கடல் வளத்தைக் காக்கும் வகையிலும் புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம் என்றார்.

  • Share this:
    இந்திய கடல்சார் மீன்வள மசோதா தாக்கல் செய்ய வேண்டாம் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள அந்த கடிதத்தில், இந்திய கடல்சார் மீன்வள மசோதா தாக்கல் செய்ய வேண்டாம். கடல்சார் மீன்வள மசோதா இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்; இந்திய கடல்சார் மீன்வள மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மத்திய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள இந்தியக் கடல்சார் மீன்வள மசோதாவில் உள்ள சில பிரிவுகளில், மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல், சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு எதிராக வலிய நடவடிக்கைகளை எடுத்தல், கட்டணங்களை விதிப்பது, பெரும் அபராதங்களை விதிப்பது போன்ற மீனவர்களுக்கு எதிரான உட்பிரிவுகள் இருப்பதால், இது பரவலாக எதிர்ப்புகளையும், அமைதியின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

    மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறும் சில உட்பிரிவுகள் மசோதாவில் உள்ளன. அனைத்து தரப்பு மக்களுடன் ஆலோசனை நடத்தியபிறகு புதிய மசோதாவை தாக்கல் செய்யலாம். இந்திய கடல்சார் மீன்வள மசோதா 2021-ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியினை தொடர வேண்டாம்.

    Also read: கரூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

    இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டாம். தொடர்ந்து, அனைத்துத் தரப்பு மக்களுடன் விவாதம் மற்றும் ஆலோசனைகள் நடத்தியபிறகு மீன்வர்களின் கருத்துகளைப் பெற்று மீனவர் நலன் காக்கும் வகையிலும் கடல் வளத்தைக் காக்கும் வகையிலும் புதியதொரு மசோதாவை நாடாளுமன்றத்தில் பின்னர் தாக்கல் செய்யலாம் என்றார்.

    இந்தியாவில் கடல் வளம் மிகுந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. நாட்டின் மொத்த கடற்கரைப் பரப்பில் 13 சதவீதம், அதாவது 1076 கி.மீ நீளம் தமிழகத்தில்தான் உள்ளது. சுமார், 40 ஆயிரம் பாரம்பரிய படகுகள், 6 ஆயிரம் விசைப்படகுகளுடன் கடல் வளத்தை நம்பி உள்ள மீனவர்கள் எண்ணிக்கையோ 10 லட்சத்துக்கும் அதிகம்.

    அதனால், இந்தியக் கடல்சார் மீனவர் மசோதா 2021ஐ நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் முயற்சியினை தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாகத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published: