''சிறுவன் சுர்ஜித் குடும்பம் துடிப்பது போல் நாமும் துடிக்கிறோம்'' - மு.க.ஸ்டாலின்

''சிறுவன் சுர்ஜித் குடும்பம் துடிப்பது போல்  நாமும் துடிக்கிறோம்'' - மு.க.ஸ்டாலின்
  • Share this:
குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும், அவரது குடும்பம் துடிப்பதை போல் நாமும் துடிக்கிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் நேற்று மாலை செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்தான்.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த மீட்பு படையினர் சிறுவனை மீட்க 13 மணி நேரத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அடுத்தடுத்து நிகழ்விடத்திற்கு வந்து பணியை துரிதப்படுத்தினர்.


இந்நிலையில் சிறுவன் சுஜித்தை பத்திரமாக மீட்க #SaveSujit #PrayforSuith என்ற ஹேஸ்டேக்கில் தங்களது கருத்தை பொதுமக்கள் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் “மனம் கனக்கிறது! குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப் போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வேண்டும்! #Savesujithvinsen“ என்று பதிவிட்டுள்ளார்.

First published: October 26, 2019, 11:16 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading