ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

MK Stalin Swearing-in ceremony: வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

MK Stalin Swearing-in ceremony: வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திமுக சட்டமன்றக் குழு தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மானத்தை ஆளுநரிடம் வழங்கிய மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு முதல்வராக பதவி ஏற்கிறார்.

  நேற்று நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 125 பேர் பங்கேற்றனர். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 பேரும் கலந்து கொண்டனர். மொத்தமாக 133 எம்.எல்.ஏக்களும் திமுக சட்டமன்றக் குழு தலைவராக மு.க.ஸ்டாலினை ஒருமனதாக தேர்வு செய்திருந்தனர்.

  இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார். அவருடன் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்பட 5 பேர் ஆளுநரை சந்தித்தனர். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கு பன்வாரிலால் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

  Also read... 69% இட ஒதுக்கீட்டை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை - அன்புமணி ராமதாஸ்!

  அதனைத் தொடர்ந்து திமுக சட்டமன்றக் குழு தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டதற்கான தீர்மானத்தை ஆளுநரிடம் வழங்கிய மு.க.ஸ்டாலின் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

  இதனை தொடர்ந்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வரும் வெள்ளி அன்று காலை 9 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காலை 9 மணிக்கு முதல்வராக பதவியேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலினுடன் இணைந்து அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.

  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Dmk leader mk stalin, MK Stalin, TN Assembly Election 2021