ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை!

ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை - அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • News18
  • Last Updated: September 27, 2018, 10:13 PM IST
  • Share this:
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் மறைவுக்குப் பின் செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் தலைவராக பொறுப்பேற்றார். ஸ்டாலின் கட்சிப் பணிகள், பொதுக்கூட்டங்கள், தொடர் பிரச்சாரங்கள், கருணாநிதி அஞ்சலி கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு இடைவிடாது இயங்கி வருகிறார்.

இந்நிலையில் நேற்று மருத்துவர்கள் சார்பில் நடத்தப்பட்ட கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஸ்டாலின் கலந்துகொண்டார். பின்னர், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


சிறுநீரகத் தொற்றால் பாதிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு பரிசோதனைகள், சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்று ஸ்டாலின் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் ஸ்டாலினுக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்று அப்பலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.  வலதுகால் தொடையில் நீர் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்து மாலை வீடு திரும்புவார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.கட்சியினர் யாரும் மருத்துவமனைக்கு வரவேண்டாம் என்றும் வாய்மொழி உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதால் திமுக தொண்டர்களோ பிற நிர்வாகிகளோ மருத்துவமனைக்கு வரவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்டாலினை  டி.ஆர் பாலு, மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர்.ALSO WATCH....First published: September 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading