• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் - ஸ்டாலின் பேச்சு

தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் - ஸ்டாலின் பேச்சு

ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி

ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும்  என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர ராஜா மற்றும் ஹெலன் சத்யா அவர்களின் திருமணம் கோபாலபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. தூய ஜார்ஜ் பேராலயத்தில் நடைபெற்றது.

திருமணத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ”கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது முன் அனுமதி பெறாமலே அவரை சந்திக்கும் நபர்களில் விக்கிரமராஜாவும் ஒருவர்.

மணமகன் மணமகள் இருவரும் வீட்டில், மத்திய - மாநில அரசு போன்று அமைதியாக இருக்கக் கூடாது, கேள்வி கேட்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போது லஞ்சம், ஊழல், கமிஷன் ஆட்சி தான் நடக்கிறது. எதிர்த்து கேள்வி கேட்கும் உரிமையை கொண்டு வந்தவர் பெரியார். இன்று அவரையே விமர்சிக்கும் நிலை உள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளித்த ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தற்போது அதனை எதிர்க்கின்றன. அதிமுகவும் 12 வாக்குகள் அளித்துள்ளது. இவர்கள் சிஏஏ-வை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றினால் நானே இவர்களை பாராட்டுவேன்.

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுவதற்காக விருது பெற்றுள்ளதாக முதலமைச்சர் கூறி வருகிறார். விருது கொடுத்தவர்களைத்தான் அடிக்க வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் கே.வி.தங்கபாலு, திமுக உடனான நட்பும் தோழமையும் தொடர வேண்டும் என வேண்டிக் கொள்வதாகவும் கூறினார்.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: