தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ஸ்டாலின் உறுதி

கேரளாவில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தால் கொள்ளை அடிக்க முடியாது என்பதால் , ஜோலார்பேட்டை யில் இருந்து கொண்டு வந்து கொள்ளை அடிக்க பார்க்கிறார்கள் ஆளும் கட்சியினர் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

news18
Updated: June 24, 2019, 12:52 PM IST
தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் - ஸ்டாலின் உறுதி
ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின்
news18
Updated: June 24, 2019, 12:52 PM IST
தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குடிநீர் பஞ்சத்தை போக்க கோரி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மேலும், அரசிடம் நிதி, திட்டம், தொழிற்சாலை, வேலைவாய்ப்பு, சட்டம், நீதி என எல்லாவற்றிற்கும் பஞ்சம் , இப்போது தண்ணீருக்கும் பஞ்சம் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் உள்ளிட்டவர்கள் தண்ணீர் பிரச்சனை குறித்து கவலை படாததால் தான் மக்கள் சாலையில் இறங்கி போராடுகின்றனர் என்றும் ஸ்டாலின் தெரிவித்தர்.

தொடர்ந்து பேசிய ஸ்டலின் மழைக்காக யாகம் நடத்துவது தவறு என நான் வாதாடவில்லை, ஏரிகளின் நீர் மட்டம் குறைந்துகொண்டே வந்த நிலையில், தண்ணீர் பஞ்சம் வரும் என்று சட்டமன்றத்தில் பேசினேன் ,ஆனால் அரசு எதையும் செய்யவில்லை. பதவியை காப்பாற்றி கொள்ளவே அதிமுக யாகம் நடத்துகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், தேர்தலை சந்திக்காமலேயே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகிறது, திமுகவினர் எதிர்ப்பார்ப்பது நடக்கப்போகிறது என்றும் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை, ஐ.டி ஊழியர்கள் தண்ணீர் பற்றாக்குறையால் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் வேலுமணியை ஊழல் மணி என்று தான் சொல்ல வேண்டும், உள்ளாட்சி துறை, ஊழல் ஆட்சி துறையாக இருக்கிறது , தண்ணீர் கேட்டு போராடுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தண்ணீர் பிரச்சனை விவகாரம் தற்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நான் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த போது, என்னை நல்லாட்சி துறை என்று அழைத்தார்கள் என்றும் ஸ்டாலின் பேசினார்.

நெம்மேலி குடிநீர் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதை துரைமுருகன் சட்டசபையில் பேசினார். நெம்மேலி குடிநீர் திட்டத்தில் முறைக்கேட்டில் ஈடுபட்டவர்களை திமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

திமுக ஆட்சி காலத்தில் குடிநீருக்காக பல திட்டங்களை செயல்படுத்தினோம். ரயில் மூலம் தண்ணீர் அனுப்ப கேரள முதல்வர் முன்வந்தும் அதை ஏற்க தமிழக அரசு மறுக்க காரணம் என்ன? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரளாவில் இருந்து தண்ணீர் கொண்டு வந்தால் கொள்ளை அடிக்க முடியாது என்பதால், ஜோலார்பேட்டையில் இருந்து கொண்டு வந்து கொள்ளை அடிக்க பார்க்கிறார்கள் ஆளும் கட்சியினர் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தண்ணீர் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணவில்லையென்றால் தமிழக சிறைகளை நிரப்பும் அளவிற்கு மிகப்பெரிய போராட்டத்தை திமுக முன்னெடுக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



Also see...

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...