தமிழகத்தில் உள்ளது செயல்படாத அரசு - ஸ்டாலின் விமர்சனம்

news18
Updated: October 10, 2019, 5:26 PM IST
தமிழகத்தில் உள்ளது செயல்படாத அரசு - ஸ்டாலின் விமர்சனம்
மு.க.ஸ்டாலின்
news18
Updated: October 10, 2019, 5:26 PM IST
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக கடந்த 3 நாட்களாக நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திண்ணை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று முன்னீர்பள்ளம், தருவை, செங்குளம் கிராம மக்களை சந்தித்த அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளாக செயல்படாத ஆட்சி நடைபெறுவதாகவும், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளதாகவும் கூறினார்.


மேலும், தமிழ்நாடே தண்ணீர் இல்லாமல் குடத்துடன் சாலைக்கு வரும் நிலையில் உள்ளதாக ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

Also see...

First published: October 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...