அந்த பயம் இருக்கட்டும்... பாஜகவின் ட்விட்டர் பதிவு குறித்து ஸ்டாலின் கருத்து!

அந்த பயம் இருக்கட்டும்... பாஜகவின் ட்விட்டர் பதிவு குறித்து ஸ்டாலின் கருத்து!
  • News18
  • Last Updated: December 24, 2019, 3:45 PM IST
  • Share this:
”அந்த பயம் இருக்கட்டும். மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்” என்று பாஜகவின் ட்விட்டர் பதிவு குறித்து ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 46-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டிருந்தது.

Also read... பாஜகவுக்கு காமாலைக் கண்: பெரியார் பற்றிய பதிவுக்கு ராமதாஸ் கண்டனம்


இந்த பதிவிற்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் என பல தரப்புகளில் இருந்து கண்டனங்கள் எழுந்தது.

இதனை தொடர்ந்து பாஜவின் ட்விட்டர் பிரிவு பெரியார் குறித்த சர்ச்சை பதிவை நீக்கியது.

இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில் “#Periyar ஐ இழிவுபடுத்தும் கருத்தைப் பதிவு செய்து, எதிர்ப்பு வந்ததும் நீக்கியுள்ளது  @BJP4TamilNadu அப்பதிவை போடுவதற்கு முன் யோசித்திருக்கலாமே?

அந்த பயம் இருக்கட்டும்! மரணித்த பிறகும் மருள வைத்துள்ளார் பெரியார்!

அதிமுக, இதற்காவது புலியாகப் பாயுமா? இல்லை மண்புழுவாய் பதுங்குமா?” என்று பதிவிட்டிருந்தார்.

Also see...
First published: December 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading