• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பொய்பிரசாரம் நடக்கிறது - மு.க ஸ்டாலின்

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பொய்பிரசாரம் நடக்கிறது - மு.க ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி வருமான வரித்துறை வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி வருமான வரித்துறை வாய் திறக்காதது ஏன் என்று திமுக தலைவர் மு..ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

    வேலூர் மாவட்டம் சோளிங்கரில், அரக்கோணம் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து, ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, அதிமுகவை கடுமையாக விமர்சித்த பாமக, பேரத்தின் அடிப்படையிலேயே கூட்டணி வைத்திருப்பதாக விமர்சித்தார்.

    திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய ஸ்டாலின், அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான ஒப்பந்ததாரர் சபேசன் வீட்டில் 15 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது பற்றி வருமான வரித்துறை வாய் திறக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய ஸ்டாலின், இந்துக்களுக்கு எதிரான கட்சி திமுக என சிலர் பொய் பிரசாரம் செய்து வருவதாகவும், அனைத்து மதத்தினருக்கும் பொதுவான கட்சி திமுக என்றும் விளக்கம் அளித்தார்.

    Read Also...

    மிளகாய்பொடி தூவி நகை கொள்ளை...!

    தனியார் சிமெண்ட் கிடங்கில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்!

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: