முதல்வர் நீலகிரிக்கு செல்லாதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

Web Desk | news18
Updated: August 13, 2019, 4:44 PM IST
முதல்வர் நீலகிரிக்கு செல்லாதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
மு.க.ஸ்டாலின்
Web Desk | news18
Updated: August 13, 2019, 4:44 PM IST
நீலகிரி மக்களை இதுவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்க்காதது ஏன் என்று முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க மேற்கு மாவட்டம் சார்பாக 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து வழி அனுப்பி வைத்தார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ’கேரளா மாநிலம் கடும் வெள்ளத்தால் பல்வேறு பகுதிகளில் கடுமையாக பாதிக்கபட்டுள்ளது. பொது மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே இது குறித்து தி.மு.க சார்பில் முடிந்த அளவிற்கு கேரள மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

அதனை ஏற்று இன்று முதல் கட்டமாக சென்னை மேற்கு மாவட்டம் சார்பில் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களாக 10 லட்ச ரூபாய் மதிப்பில் நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து இதுபோன்ற நிவாரண பொருட்களை வர இருக்கிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தகுதிக்கு மீறி விமர்சனம் செய்கிறார். நான் நீலகிரி சென்றது சீன் காட்ட சென்றதாக விமர்சித்திருக்கிறார். லண்டன் போகக்கூடிய முதல்வர் சீன் காட்ட போகிறார் என்று நான் சொல்ல நேரம் ஆகாது.

ஆனால் அவரைப் போல பொறுப்பில் இருந்து பதவியை மறந்து இவ்வளவு கீழ்த்தரமாக நான் பேசமாட்டேன். கோவை வந்த முதல்வர் நீலகிரிக்கு செல்லவில்லை. அதற்கு எந்த பதிலும் இதுவரை சொல்லவில்லை. அதற்கெல்லாம் முதல்வர் பதில் சொல்ல வேண்டும்’ என்று தெரிவித்தார்.

Also see:
First published: August 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...