கருணாநிதியின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது! சிலையைத் திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் உருக்கம்

Karthick S | news18
Updated: September 22, 2019, 10:24 PM IST
கருணாநிதியின் வாழ்க்கை போராட்டம் நிறைந்தது! சிலையைத் திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் உருக்கம்
மு.க.ஸ்டாலின்
Karthick S | news18
Updated: September 22, 2019, 10:24 PM IST
ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்துவைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீதிமன்ற அனுமதி பெற்று தமிழகம் முழுவதும் சிலைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் முழு உருவ சிலையை, மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர் தொண்டர்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், ’கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம் நிறைந்ததுதான் என்றும், திருமணத்தின் போது மணமாலையோடு சென்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்றார் என்றும் கூறினார்.

மேலும், கருணாநிதி மறைந்தபோது அவரின் உடலை அடக்கம் செய்ய நிலத்தை தர அரசு மறுத்ததாகவும், சிலை அமைக்கவும் போராடிதான் வெற்றி பெற்றோம் என்றும் கூறினார். மேலும், ஜெயலலிதா மறைந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும், அக்கட்சியினர் இதுவரை இரங்கல் கூட்டம் கூட நடத்திவில்லை எனவும் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.


Also see:
First published: September 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...