Home /News /tamil-nadu /

பின்னிப்பிணைந்த குரல் ஒலிப்பதை நிறுத்திக்கொண்டது... சரோஜ் நாராயணஸ்வாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

பின்னிப்பிணைந்த குரல் ஒலிப்பதை நிறுத்திக்கொண்டது... சரோஜ் நாராயணஸ்வாமி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சரோஜ் நாராயணஸ்வாமிக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

சரோஜ் நாராயணஸ்வாமிக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

1962 ஆம் ஆண்டு வானொலி சேவையில் இணைந்த சரோஜ் நாராயணசுவாமி, தமிழ் செய்தி வாசிப்பாளராக சுமார் 35 வருட அனுபவம் கொண்டவர். அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    'அகில இந்திய வானொலி ஆகாசவாணியின் காலை செய்திகளை வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி.. ' என்று கேட்காமல் 1980-90 கள் கழிந்திருக்காது.

    20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தினந்தோறும் அனைவரின் வீடுகளிலும் ஒலிக்கும் குரல் இது தான். அன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமான மிகச் சிறந்த தகவல் தொடர்பு சாதனமாக இருந்த வானொலியில், காலை 7.15 மணிக்கு வரும் செய்திகளையே அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருப்பர்.

    அதை அழகுற தொகுத்து தனது வெண்கலக் குரலில் உலகிற்கு வசித்தவர் சரோஜ் நாரணாயணசுவாமி. ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற சரோஜ் நாராயணசுவாமி, தனது தாய்மொழியான தமிழிலும் புலமை பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு, வானொலிப் பணியில் சேர்ந்த அவர் மும்பையிலிருந்து டெல்லிக்குச் சென்றார்.

    பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழும் இவர், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், நரசிம்மராவ் மற்றும் பலரை பேட்டி கண்டுள்ளார்.

    வீடுகளில் தேசிய கொடி ஏற்றும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை..

    1962 ஆம் ஆண்டு வானொலி சேவையில் இணைந்த சரோஜ் நாராயணசுவாமி, தமிழ் செய்தி வாசிப்பாளராக சுமார் 35 வருட அனுபவம் கொண்டவர். அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

    ஒலிப்பரப்புத் துறையில் சரோஜ் நாராயணசுவாமியின் பங்களிப்பிற்காக 2009 ஆம் ஆண்டில் தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது.அவர் நேற்று மும்பையில் நேற்று காலமானார். பலவும் அவரது மறைவுக்கு இரங்கல் யதேறிவித்து வருகின்றனர்.

    சரோஜ் நாராயணசுவாமி இழப்பிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியைத் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் குறிப்பில், ”அன்றாடச் செய்திகளின் குரலாக நுழைந்து, வரலாற்றின் குரலாக நிலைத்து நின்றுவிட்டது திருமதி சரோஜ் நாராயண்சுவாமி அவர்களின் குரல்!

    மறக்கவொண்ணா நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்த அக்குரல் நேற்றோடு ஒலிப்பதை நிறுத்திக்கொண்டு விட்டது அறிந்து வேதனையடைந்தேன். எனது ஆழ்ந்த இரங்கல்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Ilakkiya GP
    First published:

    Tags: CM MK Stalin, Female news reader, MK Stalin

    அடுத்த செய்தி